தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.ம.மு.க வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் - கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Feb 19 2020 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள மாண்புமிகு அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது குறித்தும், அ.ம.மு.க வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் மாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, கழக செயல்வீரர்களின் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.M.ரெங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவலில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு அம்மா பிறந்தநாளன்று நலத்திட்டங்கள், அன்னதானம் மற்றும் ஏழை, எளியோருக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள பொதுக்‍கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை உற்சாகமாக வரவேற்பது என தீர்மானிக்‍கப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்‍கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக்‍ கொண்டாடுவது குறித்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு.ராமுத்தேவர், கழக அமைப்பு செயலாளர் திரு. தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள நெல்லைக்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை வரவேற்க, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் நெல்லைக்கு சென்று உற்சாக வரவேற்பு அளிக்‍க முடிவு செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00