இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள், பொதுமக்கள் போராட்டம்

Feb 19 2020 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதைக்‍ கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள், பொதுமக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தாக்‍குதல் நடத்தியதைக்‍ கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பழைய பேருந்து நிறுத்தம் முன்பு, அனைத்து ஜமாத்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்பிணிப் பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இச்சட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என எச்சரித்தனர்.

இதேபோல், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் திரு.மலர்வேந்தன், கூத்தாநல்லூர் நகர கழக செயலாளர் சின்னஅமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டக்குழு சார்பில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். தேசியக் கொடிகளுடன் தரையில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டத்திருத்தங்களை எதிர்த்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பு இஸ்லாமியர்கள் 7-வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00