குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் - சென்னையில் பல்லாயிரக்‍கணக்‍கில் குவிந்த இஸ்லாமியர்கள்

Feb 19 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத் தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளதால், அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

முற்றுகைப் போராட்டம் தொடங்கவிருக்‍கும் கலைவாணர் அரங்கம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அண்ணா சாலை, வாலாஜா சாலை, மெரினா கடற்கரை பகுதி போன்ற இடங்களில் காணும் இடமெல்லாம் இஸ்லாமியர்கள் குவிந்திருப்பதால், பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை தடுக்‍கும் முயற்சியாக பல்லாயிரக்‍கணக்‍கில் காவல்துறையினரும் குவிக்‍கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்‍குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையைப் போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00