இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் : கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் விடுவிப்பு

Feb 23 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்‍கு, மத்திய குற்றப்பிரிவுக்‍கு மாற்றப்பட்டதை அடுத்து, அதுதொடர்பான ஆவணங்கள் நாளை ஒப்படைக்‍கப்படுகின்றன.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள E.V.P. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த 20-ம் தேதியன்று நடைபெற்ற படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக, திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்த நிலையில், அம்பத்தூர் நீதிமன்றம் அவருக்‍கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கை, மத்திய குற்றப்பிரிவுக்‍கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்‍கை விசாரித்து வந்த நசரத்பேட்டை காவல் துறையினர், அதுதொடர்பான ஆவணங்களை நாளை மத்திய குற்றப்பிரிவினரிடம் ஒப்படைக்‍க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00