நீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்

Feb 26 2020 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற விவகாரம், கடந்த ஆண்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தனுஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் மோசடி செய்ததாக கல்லூரி நிர்வாகம், புகார் அளித்தது. இதனடிப்படையில், மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்ததாக மாணவரின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார். மாணவர் தனுஷுக்கு இந்தி மொழி தெரியாத நிலையில், பீகாரில் நடைபெற்ற நீட் தேர்வில் இந்தி மொழியில் தேர்வு எழுதி மோசடி செய்து தேர்ச்சி பெற்றதையடுத்து அவர் சிக்கியுள்ளார். மாணவருக்காக தேர்வு எழுதிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 2018- ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்திற்கு சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00