இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான இயக்‍குநர் ஷங்கர் - 3 பேர் உயிரிழப்பு குறித்து 2 மணி நேரம் தீவிர விசாரணை

Feb 27 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியன்-2 படப்பிடிப்பின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சென்னை வேப்பேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில், இயக்‍குநர் ஷங்கரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த 20ம் தேதி ராட்சத கிரேன் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த விபத்து தொடர்பான வழக்‍கு, மத்திய குற்றப்பிரிவுக்‍கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. லைக்‍கா நிறுவனம், நடிகர் கமல்ஹாசன், இயக்‍குநர் சங்கர் உள்ளிட்டோர் விசாரணைக்‍கு நேரில் ஆஜராக, மத்திய குற்றப்பிரிவு சார்பாக சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வேப்பேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில், இயக்‍குநர் ஷங்கர் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00