அரசு ஊழியர்கள், பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - உத்தரவை மீறுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

Feb 27 2020 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு ஊழியர்கள், பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும், உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்கும், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அலுவலக நேரங்களில், ஊழியர்கள், அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், ஊழியர்கள் யாரும் அடையாள அட்டை அணிவதில்லை என புகார்கள் வருவதாக அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, பணியின்போது கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், அதனை துறை தலைவர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்‍கையை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்‍கப்படும் என்றும் சுற்றறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00