அம்மா பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க சார்பில் கழகக்‍கொடி ஏற்றப்பட்டது - பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

Feb 27 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க சார்பில் கழகக்‍கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி, வேலூர் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டக் ‍கழகச் செயலாளர் திரு.ஏ.எஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்‍கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் பகுதியில் அ.ம.மு.க கொடியேற்றப்பட்டு, மாண்புமிகு அம்மா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு. என்.ஜி.பார்த்திபன், வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஏ.எஸ். ராஜா, வாலாஜா ஒன்றியச் செயலாளர் திரு.ஏ.கே.எஸ் ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், ஏழை-எளியோருக்‍கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன.

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் வடக்கு மாவட்டம், நெய்வேலி நகர எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி கழகக்‍ கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அம்மா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, கழகக்‍கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்‍கள் ஏராளமானோருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.அக்ரி.பி.முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக்‍கழகம் சார்பில் சேத்பட் மற்றும் சந்தவாசல், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.மா.கி.வரதராஜன், எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் திரு.பையூர்.சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில், அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற, அம்மா பிறந்தநாள் விழாவில், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை கழக துணை பொதுச் செயலாளர் திரு பி. பழனியப்பன் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் அரூர் திரு.ஆர்.ஆர். முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00