தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

Feb 28 2020 9:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, கரும்பு தோட்டத்தில் புகுந்த இரண்டு யானைகள் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரளவாடி கிராமம் ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கரளவாடியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் இரண்டு யானைகள் இறந்து கிடப்பதாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த ஜீரகள்ளி வனத்துறையினர், யானைகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி, யானைகள் வருவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தோட்ட உரிமையாளர் கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00