தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ள வெளிநாட்டவர்கள் பொது வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்‍கை - தமிழக அரசு எச்சரிக்‍கை

Mar 25 2020 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ள வெளிநாட்டவர்கள் பொது வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தமிழக அரசு எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். கொரோனா அதிவேகமாக பரவி வருவதாகவும், இதனால் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து வந்த 55 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், நியூசிலாந்தில் இருந்து வந்த மற்றொரு 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்‍கை 18 ஆக உயர்ந்தது. இதில் மதுரையில் ஒருவர் உயிரிழந்ததால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வெளியே நடமாடினால் கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாலேயே அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00