ஜவுளி உற்பத்தியை நிறுத்திவிட்டு முகக்கவசம் தயாரிக்கும் விருதுநகரைச் சேர்ந்த தம்பதி - நாளொன்றுக்கு 5000 முதல் 6000 முகக்கவசம் தயாரித்து விற்பனை

Mar 25 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பால், முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சேவை மனப்பான்மையோடு அவற்றை தயாரித்து விநியோகிக்கின்றனர், விருதுநகரைச் சேர்ந்த தம்பதியர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம், என்கிற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. இதனால், முகக்கவசத்திற்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், விருதுநகரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களான முருகன்-சத்யா தம்பதியர், ஜவுளி உற்பத்தியை நிறுத்திவிட்டு, முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரியாபட்டியைச் சேர்ந்த இவர்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு, ஆதரவற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்த முருகன் - சத்யா தம்பதியர், ஜவுளி தயாரிப்பை நிறுத்திவிட்டு, முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகக்கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபடுவது, தங்களுக்கு மனநிறைவை அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00