144 தடை உத்தரவு நேற்று மாலை அமலுக்‍கு வந்தது : சரக்‍குகளை முந்திக்‍கொண்டு வாங்கிய மதுபிரியர்கள்

Mar 25 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவு ​நேற்று மாலையுடன் அமலுக்‍கு வந்த நிலையில், அதற்கு முன்னதாக, மது பிரியர்கள் டாஸ்மாக்‍ கடைகளை முற்றுகையிட்டு போட்டி போட்டுக்‍கொண்டு சரக்‍குகளை வாங்கிய காட்சி காண்போரை வேதனை அடையச் செய்தது.

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருவதாக அரசு எச்சரிக்‍கை விடுத்ததை அடுத்து, பொதுமக்‍கள் வெளியில் வருவதை தவிர்க்‍கும் நோக்‍கில், தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்‍கு வந்தது. இதனால், முன்னெச்சரிக்‍கையாக பொதுமக்‍கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். அது ஒருபுறம் இருக்‍க, மதுபிரியர்களும் டாஸ்மாக்‍ கடைகளுக்‍கு படையெடுத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள 3 டாஸ்மாக் கடைகளில், ஒரே நேரத்தில் அதிகளவில் மதுபிரியர்கள் குவிந்ததால், பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மதுபிரியர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு, சரக்‍குகளை பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாலை 6 மணியுடன் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பேருந்துகள், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. சரக்குகளை வாங்கி தேக்‍கி வைத்துக்‍ கொள்வதற்காக, வேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபிரியர்கள் முந்திக்கொண்டு சரக்‍குகள் வாங்கும் காட்சி வேதனையடையச் செய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மது பிரியர்களும் கூட்டம், கூட்டமாக டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு, முண்டியடித்து ஒரு வாரத்திற்கு தேவையான மதுவை வாங்கிச் சென்றனர். இதனால், மதுக்கடைகளில் தள்ளு முள்ளும், சலசலப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00