தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது உயிர்க்கொல்லி கொரோனா - வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Mar 25 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 5 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 23-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கெனவே 18 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசிய நாட்டிலிருந்து, சுற்றுலாப் பயணமாக தமிழகத்திற்கு வந்த 4 பேர் மற்றும் அவர்களின் சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேர், கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக சுகாதார அமைச்சர் டாக்‍டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இவர்கள் 5 பேரும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை 23 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்‍கு இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் 15 ஆயிரத்து 492 பேர், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமான 890 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 757 பேருக்‍கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாகவும், 23 பேருக்‍கு Corona வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் திரு. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், 110 பேரின் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00