தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீடுகளிலேயே எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்றன

Mar 26 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளிலேயே எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருச்சியில் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணம், மணப்பெண் வீட்டிலேயே நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த திரு.சந்தானகிருஷ்ணன் என்பவருக்கும், திருச்சி உறையூரை சேர்ந்த அமுதா என்பவருக்கும், இருவீட்டார் சம்மதத்துடன், உறையூரில் உள்ள மணப்பெண் வீட்டிலேயே நடைப்பெற்றது. இதில் 15 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

ராமநாதபுரத்தை அடுத்த காட்டூரணி பகுதியை சேர்ந்த திரு.முனியாண்டி என்பவரின் மகன் அர்ஜுனனுக்கும், மேலசேர்ந்த நேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமியின் மகள் சுகிர்தா என்பவருக்கும் திருமண மண்டபத்தில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில், 15 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தை சேர்ந்த சாமிக்‍கண்ணு - பத்மாவதியின் மகன் லட்சுமணனுக்‍கும், வெண்ணாங்குபட்டு பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்‍கு கடந்த மூன்று மாதங்களுக்‍கு முன் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், தடை உத்தரவு காரணமாக மண்டபத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அம்மன் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், உறவினர்கள் 10 பேருடன் இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00