தமிழகம் முழுவதும் இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் குவிந்த கூட்டம் - கொரோனா விழிப்புணர்வை தட்டிக்‍கழித்த பொதுமக்‍களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்

Mar 29 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் மளிகைக்‍கடைகள் செயல்பட தமிழக அரசு நேரக்‍கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அமைக்‍கப்பட்டிருந்த காய்கறி சந்தைகளில் மக்‍கள் அதிக அளவில் திரண்டு வாங்கிச் சென்றனர்.

ஊரடங்கு உத்தரவு 5-வது நாளாக இன்று தொடரும் நிலையில், மளிகைக்‍ கடை, இறைச்சிக்‍ கடை, மற்றும் பெட்ரோல் பங்க்‍குகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராஜாஜி காய்கறி மார்க்‍கெட், ஜவஹர்லால் நேரு மார்க்‍கெட் ஆகியவற்றில் வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்‍கும் வகையில், மார்க்‍கெட்டின் நுழைவாயிலில், ஒரு மீட்டர் தூர இடைவெளிவிட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடியில், வாகனம் மூலம் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாகக்‍கூறி காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்தது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டு, விவசாயிகள் நேரடியாக காய்கறி விற்பனை செய்ய ஆட்சியர் அனுமதி அளித்தார். இதன்பேரில், காய்கறிகள் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், அனைத்து வகையான காய்கறிகளும் விற்பனைக்‍கு குவிந்துள்ளன. சமூக விலகலை கடைபிடிக்‍கும் வகையில், பேருந்து நிலையத்தின் உள்ளே பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டுள்ளன. 200க்‍கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை இன்றுமுதல் செயல்படத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்‍க, மக்‍கள் ஒரே இடத்தில் அதிகம் கூடாத வகையில், காவல்துறையினர் ஒலிப்பெருக்‍கி மூலம் எச்சரிக்‍கை செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே, காய்கனி தற்காலிக மார்க்கெட்டும், நத்தம் காவல் நிலையத்திற்கு எதிரே தற்காலிக மார்க்கெட்டும் செயல்பட்டு வருகின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காய்கறிகளை வாங்க வழக்கத்தைவிட அதிகமான மக்‍கள் திரண்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்‍கப்படாததுடன், அதற்கான கட்டங்களும் அமைக்‍கப்படவில்லை. முகக்‍கவசமும் அணியாமல் காய்கறிகளை மக்‍கள் வாங்கிச் சென்றனர்.

தஞ்சையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று, மார்க்கெட் பகுதியில் காய்கறிகள், இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்‍கவசம் அணியாமலும் இருந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00