வெஸ்ட் இண்டீசில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி - பாதிக்கப்பட்ட நபர் வசித்த இடத்தில் இருந்து 7 கி.மீ சுற்றளவில் எச்சரிக்கை

Mar 29 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெஸ்ட் இண்டீசில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த 42 வயது நபருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வசிக்‍கும் இடத்தில் இருந்து 7 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்‍கும் மக்‍கள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், அண்மையில் வெஸ்ட் இண்டீசில் இருந்து திரும்பினார். அவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சை அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. அவரைப் பார்க்‍கச் சென்ற அவரது குடும்பத்தினர் இருவரின் ரத்த மாதிரிகள் எடுக்‍கப்பட்டு கொரோனா பரிசோதனைக்‍கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர் வசித்து வந்த கும்பகோணம் மையப் பகுதியான வடக்கு மாதப்பா சந்தில், மக்‍கள் நடமாட தடை விதிக்‍கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றி 7 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்‍கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்‍ கொள்ள வேண்டும் என்றும், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வீராச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00