சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகர் பகுதிகளில் அதிகரிக்‍கும் வாகனப் போக்‍குவரத்து - கொரோனா பாதிப்பை அறியாமல் ஊரடங்கு உத்தரவை அலட்சியம் செய்யும் பொதுமக்‍கள்

Mar 31 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்‍கும் வகையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் போலீசார் வழக்‍குப்பதிவு செய்து வருகின்றனர். எச்சரிக்‍கையை மீறுபவர்களின் இருசக்‍கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுக்‍கு மத்தியிலும் ஏராளமானோர் சாலைகளில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். தடையை மீறியதற்காக, நேற்று ஒரே நாளில் 144 தடையை மீறியதாக 255 பேர் மீது 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 188 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரில் இன்று காலை இளங்கடை பகுதியில் விதி முறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்டோரை, போலீசார் தடுத்து நிறுத்தி சாலைகளில் வரிசையாக நிற்கவைத்து தோப்புகரணம் போட வைத்தனர். வெளியே இனி வரமாட்டோம் என உறுதிமொழி எடுத்தல் போன்ற நூதன தண்டனைகளை வழங்கினர்.

தூத்துக்குடியில் பல பகுதிகளில் காவல்துறையின் எச்சரிக்கையினையும் மீறி சிலர் இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றி வருகின்றனர். இதனையடுத்து, தேவையில்லாமல் சுற்றி திரிந்த மற்றும் தடையை மீறி கடையை திறந்து வைத்த 310 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 210 பேரின் இரு சக்கரவாகங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நேற்று இரவு மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுமக்கள் சாலைகளில் சுற்றி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இளைஞர்கள் சாலைகளில் இருசக்கர வாகனம் மூலம் சுற்றி பொழுதை கழித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி பகுதி காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிந்தவர்களை பிடித்து, அவர்களது வானத்தின் முன்புறம் பெயிண்டால் அடையாளமிட்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்துறைப்பூண்டியில் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து பகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00