வாகன போக்குவரத்து இல்லாததால் பல நூறு ஏக்கரில் சாகுபடியான பூக்களை பறிக்க முடியாத அவலம் - செலவு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

Apr 2 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகைப்பூ அதிகம் விளைந்துள்ள போதிலும், போக்குவரத்து பிரச்சினை காரணமாக அவற்றை பறிக்க முடியாமல் செடியிலேயே விட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மல்லிகைப்பூவுக்‍கு புகழ்பெற்ற மதுரையில், கொரோனா வைரஸ் தாக்‍கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பூக்‍களை விற்பனை செய்ய முடியாமல், செடியிலேயே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்‍குறியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி, மல்லிகைப்பூக்‍களை திண்டுக்‍கல்லில் உள்ள நறுமணப் பொருட்கள் தயாரிக்‍கும் ஆலைக்‍கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வலையங்குளம், எலியார்பத்தி, பாரப்பத்தி, பரம்புப்பட்டி ஆகிய இடங்களிலிருந்து வாகனங்கள் மூலம் மல்லிகைப்பூக்‍கள் தொழிற்சாலைகளுக்‍கு கொண்டு செல்லப்பட்டன. ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை மல்லிகைப்பூக்‍களை தொடர்ந்து ஏற்றுமதி செய்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருச்சியிலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்‍கப்பட்டுள்ளது. பூக்களை பறிக்‍க ஆள் இல்லாததாலும், மலர் சந்தைகள் மூடப்பட்டிருப்பதாலும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00