ஆத்தூரில் ஊரடங்கால் பருத்தியை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு - உரிய நிவாரணம் வழங்க அரசுக்‍கு வேண்டுகோள்

Apr 2 2020 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவால், சேலம் மாவட்டம் ஆத்தூரில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி, ஆட்கள் கிடைக்காமல் அறுவடை செய்யாமல் செடிகளிலே காய்ந்து உதிரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வீரகனூர், கிழக்குராஜபாளையம், லத்துவாடி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் மானாவாரி பயிரான பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரங்கு உத்தரவால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, பருத்தி அறுவடை செய்ய கூலி ஆட்கள் வேலைக்கு வராததால், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, செடிகளிலே காய்ந்து உதிர்ந்து வீணாகி வருகிறது. பருத்தி கொள்முதல் செய்யும் அரசு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும், தனியார் கொள்முதல் நிலையங்களும் மூடியதால் அறுவடை செய்த பருத்தி மூட்டைகளையும் விற்பனை செய்யமுடியாமல் தேக்கமடைந்துள்ளதோடு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00