டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி - திருச்சி அருகே கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேற தடை விதிப்பு

Apr 2 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியிலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள், ஊரைவிட்டு வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், கரட்டாம்பட்டியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை , சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. வருவாய் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கரட்டாம்பட்டியில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்ல, போலீசார் தடை விதித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00