தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் பொதுமக்‍களுக்‍கு வினியோகம்

Apr 2 2020 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆலோசனையின்படி, பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியிலும், பொதுமக்‍களுக்‍கு முகக்‍ கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் வழங்கும் பணியில் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 18-வது வார்டு சார்பில், கொரோனா பாதுகாப்புக்‍காக அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ், வட்ட செயலாளர் திரு.காசிலிங்கம் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டு முகக் கவசங்களை வழங்கினர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், எடத்தெரு பகுதிக்குட்பட்ட தர்மநாதபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை, மாநகர் மாவட்டகழக செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் வழங்கினார். இதேபோன்று நடைபாதை வாசிகளுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டது. இதில் வட்டகழக செயலாளர்கள் திரு.கிருஷ்ணன், திரு.ரோஜர், திரு.சீனிவாசன், திரு.லோகு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் கழகம் சார்பில், அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் பகுதிகளில் வசிக்கும் 800 பேருக்கு முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பெரிய சேமூர் பகுதி மகளிரணி செயலாளர் திருமதி ஜமுனாராணி, அக்ரஹாரம் பகுதி 6-வது வட்ட செயலாளர் திரு.மாதேஸ்வரன், 14 வது வட்ட செயலாளர் திரு.நூறுல்லா, அக்ரஹாரம் பகுதி இலாஹிதா, அக்ரஹாரம் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி பரமேஸ்வரி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00