தகுதியுள்ள ஏழை-எளிய மக்‍கள் அனைவருக்‍கும் கொரோனா உதவித்தொகை முறையாக கிடைப்பதை பழனிசாமி அரசு உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Apr 3 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா உதவித் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதில் ஆளும் கட்சியினர் அத்துமீறி தலையிடுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களை வைத்து, தகுதியுள்ள ஏழை-எளிய மக்‍கள் அனைவருக்‍கும் முறையாக உதவித்தொகை கிடைப்பதை பழனிசாமி அரசு உறுதி செய்ய வேண்டும் என, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், கொரோனா பாதிப்பு உதவித் தொகைக்‍கான டோக்‍கன் அளித்தபோதே ஆளும் கட்சியினர் தங்களுக்‍கு வேண்டப்பட்டவர்களுக்‍கு மட்டும் வழங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது நேரடியாக வீடுகளுக்‍கே சென்று பணமாக வழங்கும்போது, இதுபோன்ற அத்துமீறல்கள் இல்லாமல் தடுக்‍க பழனிசாமி அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நெருக்‍கடியான நேரத்தில்கூட, ஆட்சியாளர்கள் மோசமான அரசியல் செய்யக் கூடாது என கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் பாதிப்புக்‍கு ஆளாகியிருக்‍கும் ஏழை, எளிய மக்‍களுக்‍காக அரசு சார்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்‍கான டோக்‍கனை தஞ்சாவூரில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தங்களுக்‍கு வேண்டப்பட்டவர்களுக்‍கு மட்டும் வழங்கியபோது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்‍கிறது -

ஆளும் கட்சியினரின் இந்த செயல், கொரோனா அச்சத்தால் பெரும் இழப்புக்‍கு ஆளாகியிருக்‍கும் ஏழை-எளிய மக்‍களுக்‍கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும் - இதன்மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முனைவது சரியானதல்ல என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 'உதவித் தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும்' என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது ஆளும் கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்‍களிடம் ஏற்படுத்தியிருக்‍கிறது- எனவே, ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல், அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்‍கள் அனைவருக்‍கும் முறையாக உதவித்தொகையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்திக்‍ கேட்டுக்‍ கொள்வதாகவும், அதே நேரத்தில் உதவித் தொகை வழங்கச் செல்வோர் மூலமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்‍க உரிய முன்னெச்சரிக்‍கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்‍கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00