தூத்துக்குடியில் கணவரை தூங்க வைத்துவிட்டு வீட்டிலிருந்து திருடிய நகைகளை மண்ணில் புதைத்து வைத்துவிட்டு மனைவி நாடகமாடியது அம்பலம்

Apr 4 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடல்நிலை சரியில்லாத கணவருக்கு கசாயம் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, வீட்டிலிருந்த 90 சவரன் நகைகளை, மனைவியே கொள்ளையடித்த நூதன சம்பவம், தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியராக வேலை பார்த்து வரும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்றிரவு, அவரது மனைவி ஜான்சி, கசாயம் வைத்துக் கொடுத்து, தூங்க வைத்துள்ளார். இருவரும் நன்றாக உறங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக, தாளமுத்து நகர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வின்சென்ட்டிற்கு கசாயம் கொடுத்து தூங்க வைத்த அவரது மனைவி ஜான்சி, அதன்பிறகு, வீட்டிலிருந்த நகைகளை எடுத்து, மண்ணில் புதைத்து வைத்துவிட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக நடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, ஜான்சியை கைது செய்த போலீசார், அவர் திருடிய 93 சவரன் நகைகளையும் மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00