மதுரை ரயில்வே கோட்டத்தில் கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் - கன்னியாகுமரியிலும் 15 ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றும் பணி தீவிரம்

Apr 4 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை ரயில்வே கோட்டத்தில் இரண்டு பழைய ரயில்களில், கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக பழைய ரயிலில் உள்ள பெட்டிகள் மூலம் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, நெல்லையை தொடர்ந்து மதுரை கோட்ட ரயில்வே பணிமனையில் உள்ள இரண்டு பழைய ரயில்களில் இருந்து இருபது பெட்டிகளில் சுமார் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள 15 பெட்டிகளுடன் கூடிய ரயிலை கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவர்கள் அமர்வதற்கான அறை மற்றும் குளியல் அறை வசதிகளுடன் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கோச்சுக்கு 18 படுக்கைகள் வீதம் 15 கோச்சுகளில் 270 படுக்கைகள் தயார்செய்ய பணிகள் நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்படும் இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00