தூத்துக்குடி ராமசாமிபுரம் பகுதி சீல் வைத்து தீவிர கண்காணிப்பு : 5 கி.மீ. சுற்றளவில் மக்களை மருத்துவ பரிசோதனை

Apr 7 2020 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தொற்று ஒருவருக்‍கு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர் வசித்து வந்த பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்களை மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த செந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், உடனடியாக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் வசித்த செந்துறை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மருத்துவகுழுவினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட குழுவினர், வீடுவீடாக சென்று பொதுமக்களுக்‍கு மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்‍கையை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்காணித்து சிறப்பு சிகிச்சை அளிக்‍க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்‍கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே கொரோனா அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட சுமார் 50 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தூத்துக்குடி ராமசாமிபுரத்தை காவல்துறையினர் சீல் வைத்து தீவிர கண்காணிப்பு வளைவில் கொண்டுவந்துள்ளனர். தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில், கொரோனா தோற்று உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வரும் மாவட்ட நிர்வாகம், விளாங்குறிச்சி, சேரன் நகர் ஆர்எஸ் புரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், கே.கே.புதூர், உக்கடம் மற்றும் போத்தனூர் உள்ளிட்ட 8 இடங்களில் நோய் தொற்று அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தது. இதனைத்தொடர்ந்து, இப்பகுதிகளை மிகவும் கண்காணிக்கக் கூடிய பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து, வயதானவர்கள், ஏற்கெனவே நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00