தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு : அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை

Apr 7 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்‍கப்பட்டது.

திருவள்ளூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்‍கர வாகனங்களில் வந்த 2 ஆயிரத்து 570 பேர் மீது வழக்‍குப் பதிவு செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 131 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்டக்‍ காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், ஊத்துக்‍கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், வடசேரி, பார்வதிபுரம், மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிபெருக்‍கிகள் மூலம் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2 ஆயிரத்து 479 பேர் மீது வழக்‍கு பதிவு செய்யப்பட்டது. ஆயிரத்து 975 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றியதாக ஆயிரத்து 418 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுமார் 7 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளியே சுற்றி வருபவர்களை போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர். நேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 649 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00