ஊரடங்கு உத்தரவு - ஏழை-எளியோருக்கு அ.ம.மு.க சார்பில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

Apr 7 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவால் மக்‍களுக்‍கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்‍க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் படி ஏழை-எளியோருக்‍கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கழகத்தினர் வழங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகம் சார்பில் சார்பில், கன்னிகோவில் தெரு, கிளி ஜோதிடர் நகர், அப்பர் தெரு ஆகிய பகுதிகளில், பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், முக கவசம், சோப், பால் பாக்கெட் மற்றும் கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பொன்ராஜா தலைமையில், உதவி பொருட்களை கழகத்தினர் வழங்கினர்.

விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் மற்றும் சிவகாசி ஒன்றியம் செங்கமல நாச்சியார்புரம் கிளைக்‍ கழகம் சார்பில், ஆதரவற்ற விதவைகள், முதியோர்கள், பட்டாசு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.G. சாமிக்காளை தலைமையில் அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருநெல்வேலி மாநகராட்சி மண்டலம் மகாராஜ் நகரில் பாளையங்கோட்டையில் உள்ள தூய்மை பணியாளர்கள் 64 பேருக்கு கை உறை, சோப் மற்றும் தலா 200 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டன. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.S. பரமசிவ ஐயப்பன், நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி ராம்சன் உமா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மீனவரணி கிழக்கு பகுதி கழகம் சார்பில், குருஸபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவ மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது மாவட்டகழக பொருளாளர் திரு.பிரைட்டன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.செனவர், கிழக்கு பகுதி செயலாளர் திரு. இன்னாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00