தமிழகத்தில் மேலும் 96 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 834-ஆக உயர்வு

Apr 10 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட வாரியாக தற்போது காண்போம்...

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 60 பேருக்கும், திண்டுக்கல்லில் 46 பேருக்கும், திருநெல்வேலியில் 56 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் 36 பேருக்கும், நாமக்கல்லில் 41 பேருக்கும், ராணிப்பேட்டையில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

செங்கல்பட்டில் 28 பேருக்கும், மதுரையில் 25 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 40 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேருக்கும், விழுப்புரத்தில் 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 26 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தலா 13 பேருக்கும், விருதுநகர், தஞ்சை மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. நாகை மாவட்டத்தில் 12 பேருக்கும், திருப்பத்தூரில் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா 6 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 பேருக்கும், தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருவருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00