சென்னை மயிலாப்பூர் போக்‍குவரத்து காவலர் அருண்காந்தி உயிரிழப்பு - சொந்த ஊரில் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்

Apr 10 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்புப் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த மயிலாப்பூர் போக்‍குவரத்து காவலர் திரு. அருண்காந்தியின் உடல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க, முழு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், வடுவூர் புதுக்‍கோட்டை கிராமத்தைச் சேர்ந்த, 33 வயதான திரு. அருண்காந்தி, சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில், போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில், போக்‍குவரத்து பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, அவருக்‍கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்‍கம் அடைந்தார். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அவர், அடுத்த சில மணிநேரத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அருண்காந்திக்‍கு ராஜபிரியா என்ற மனைவியும், அரனிகா என்ற, ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

பிரேத பரிசோதனைக்‍குப் பின்னர், காவலர் அருண்காந்தியின் உடல், அவரது சொந்த ஊரான, மன்னார்குடியை அடுத்த, வடுவூர் புதுக்‍கோட்டை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, அருண்காந்தியின் உடல், 21 குண்டுகள் முழங்க, முழு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00