விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஸ்கெட், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யவும் வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Apr 10 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கால் நெல், உளுந்து, பயிறு, காய்கறி போன்ற விளைப்பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பை இருப்பு இல்லை என்பது போன்ற காரணங்களை சொல்லி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக செய்திகள் வருகின்றன - மேலும் விவசாயிகள் விளைவித்த உளுந்து, பயிறு உள்ளிட்ட தானியங்களையும் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் - மலைப்பிரதேசங்களில் காய்கறி விவசாயிகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கேரட் போன்ற காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் கால்நடைகளுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது - இன்னொருபுறம் காய்கறி, பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது - ஏற்கெனவே விளைபொருட்கள் வீணாவதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் மீண்டும் எப்படி விளைபொருட்களை உற்பத்தி செய்ய முன்வருவார்கள்? என்றும் திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலை தொடராமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே விற்பனை செய்யும் அளவுக்கே கையிருப்பு இருப்பதாக வணிகர் அமைப்பினர் கூறியிருந்தனர் - அதனைத்தொடர்ந்து தற்போது பிஸ்கெட், பிரெட் போன்ற பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - இதனை கருத்தில் கொண்டு எந்த தட்டுப்பாடும் ஏற்படாதவாறு முன்கூட்டியே அந்த பொருட்களை உற்பத்தி செய்யவும், அவற்றை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசை திரு.டிடிவி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00