விருதுநகர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு - சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் தடுப்பூசி

Apr 10 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டத்தில், ரேபிஸ் நோய் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சாத்தலிங்கம் - பிரேமா தம்பதியின் மகன் சதீஷ்குமார். 8 வயது சிறுவனான அவன், 3 மாதங்களுக்கு முன்பு, வீட்டின் அருகே விளையாடிய போது, தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அப்போது சிறுவனுக்கு தடுப்பூசிகள் முறையாக போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில், சிறுவன் சதீஷ்குமார் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டான். 108 ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு ரேபிஸ் தொற்று இருப்பதை அறிந்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் சதீஷ்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, சிறுவன் உயிரிழந்து விட்டான். ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, அருப்புக்கோட்டை, கமுதி, மதுரை ஆகிய இடங்களுக்கு, அவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்களுக்கு, மூத்த மருத்துவர்களின் அறிவுரைப்படி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00