தமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்யப்பட்டும், கொள்முதல் செய்யப்படாத அவலம் - உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை

Apr 10 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்கத்தால், கரும்பு, வாழை மற்றும் பூ விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விற்பனையில்லாத காரணத்தால் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொளிஞ்சிவாடி, மதுக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன. ஊரடங்கால் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், திடீரென்று பெய்த கனமழையால், வா‌ழை மரங்கள் சாய்ந்தன. ஊரடங்கு காரணமாக, விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால், கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய பகுதிகளில், பூக்கள் விலை போகாததால், சாகுபடி செய்துள்ள பூக்கள், தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. அழுகும் மல்லிகைப்பூக்களை டிராக்டர்களை கொண்டு உழுது நிலத்திற்கு உரமாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கில் செலவு செய்து, சாகுபடி செய்யப்பட்ட பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விரக்தியில் மண்ணில் புதைத்து வரும் சம்பவம், விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00