அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு - ஊரடங்கை பயன்படுத்தி வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதாக வேதனை

Apr 10 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு காரணமாக அறுவடை செய்த தானியங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உளுந்து, பாசிப்பயிறு, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு தேங்கியுள்ளது. இதனால், சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த திடீர் மழையினால், நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், 71 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல், 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. மதுபானங்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, தங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தேக்கமடைந்திருந்தன. இதுகுறித்த செய்தி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் கடந்த 8-ம் தேதியன்று ஒளிபரப்பானது. இதனைத்தொடர்ந்து, நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஊரடங்கிலிருந்து வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், நிலக்கடலை, எள் அறுவடை பணிகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட எள், கடலை போன்றவற்றை விற்பனை செய்ய இயலவில்லை என ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00