கொரோனாவால் பொருளாதார பாதிப்பு எதிரொலி - அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை

May 22 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, செலவுகளை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கருதப்பட்டிருந்த வரவு செலவு மதிப்பீடுகள், கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை சமாளிக்க அரசின் செலவுகளை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தமிழக நிதித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில், 20 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அலுவல் ரீதியாக நடைபெறும் மதிய உணவு, இரவு உணவு போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கு, அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாகவும், மேசை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள் வாங்குவதற்கான தொகையில், 50 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், அத்தியாவசியத் தேவையை தவிர்த்து, புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ஓராண்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தொகையும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் சால்வைகள், பூங்கொத்துகள் போன்ற நினைவுப் பரிசுகள் வழங்கக்கூடாது, அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது, அரசு செலவில் வெளிநாடு பயணம் செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஊழியர்களுக்கான தினப்படி 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விளம்பரச் செலவுகளை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளவும், அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00