தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 2-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு : அ.ம.மு.க சார்பில் மலர்தூவி அஞ்சலி

May 22 2020 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு 2ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதையொட்டி, துப்பாக்‍கிச்சூட்டில் பலியானவர்களின் நினைவாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.புவனேஸவரன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் ஆகியோர், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, துப்பாக்‍கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் திரேஸ்புரத்தில் மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டிருந்தது. பொதுமக்கள், ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00