மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் - டெல்டா மாவட்டங்களில், 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
May 22 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூர் அணை அடுத்த மாதம் 12-ம் தேதி திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்டங்களில், 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம், 100 அடியாக இருப்பதால், வரும் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது, 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதர பகுதிகளில், நாற்றங்கால் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.