அ.ம.மு.க., சார்பில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் : அரிசி, காய்கறிகள், முகக் கவசங்களை வழங்கிய அ.ம.மு.க.,வினர்

May 23 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி 5வது வார்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசியினை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.காளிமுத்து வழங்கினார். நிகழ்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சந்தோஷ்குமார் நகர செயலாளர்கள் திரு.செல்வக்கனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு.செல்லப்பாண்டியன் . தகவல் தொழில் பிரிவு திரு.செயலாளர் ஐயப்பன். மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி. பொன்னுத்தாய் நகர 5-ஆவது வார்டு பொறுப்பாளர் திரு.குணசேகரன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் வடக்கு மற்றும் மேற்கு பகுதி யின் 75வது வட்ட கழகம் சார்பில் மாடக்குளம், தெற்குதெரு, ஆர்.சி.தெரு ஆகிய பகுதிகளில் வசிக்ககூடிய 300க்கும் மேற்பட்ட ஏழை எளியோர், மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் திரு.மா.ஜெயபால், வடக்கு மாவட்ட கழக நிர்வாகி திரு.மாயன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எம் கோதண்டபாணி ஆலோசனைப்படி இலத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திருவாதூர் P. பாரதி பாபு ஏற்பாட்டில், செய்யூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மை பிரிவு சார்பில், 150 ஏழை மாணவிகள் குடும்பத்திற்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.எட்வீன் பாண்டியன், துணை தலைவர் திரு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் , சுவாமிதோப்பு, பகுதியில் வசிக்கும், 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடுபத்தினருக்கு் அரிசி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பி.செந்தில்முருகன் வழங்கினார். - இதில் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் திருமதி.அம்மு ஆன்றோ, மாவட்ட எம்,ஜி,ஆர் மன்ற இணை செயலாளர் திருமதி. புஷ்பலதா செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி நான்காவது வட்டக் கழகம் சார்பில், ஜோதி நகர் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், கபசுரக் குடிநீர், முகக்கவசம், உள்ளிட்ட பொருட்களை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. பொன்ராஜா, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் திரு. கே.ஏ.குப்பன், நான்காவது வட்டக் கழக செயலாளர் திரு. பி.செல்வம் உள்ளிட்டோர் வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதிக்குட்பட்ட, கீழ் மோட்டூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோருக்கு, கழக அமைப்பு செயலாளர் திரு. கோபால், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. என்.ஜி.பார்த்திபன் ஆகியோர் தலைமையில், 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளி‌ட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், நகர செயலாளர் திரு. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கிளை கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், கக்கரை கிராமத்தில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. மா.சேகர் வழங்கினார். இதில், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ‌திரு. ஆசைத்தம்பி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் திரு. முல்லைவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்பநாபபுரம் நகரக் கழகம் சார்பில், வறுமையில் வாடும் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு, தக்கலை பள்ளி வாசலில், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை, மேற்கு மாவட்ட செயலாளர் திரு. ஜெங்கின்ஸ் வழங்கினார். இதில், பத்பநாபபுரம் நகரக் செயலாளர் திரு. முகமது சாதிக் உள்ளிட்‍டோர் பங்கேற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரில் வசிக்கும் 100 பேருக்கு, அரிசி உள்ளிட்ட ‍பொருட்களை, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. S.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஏ.பி.பால் கண்ணன் ஆகியோர் வழங்கினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் திரு. தாழை மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென் சென்னை தெற்கு மாவட்டம், வேளச்சேரி பகுதி, பெரியார் நகரில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்களை, ,கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. G. செந்தமிழன், வேளச்சேரி பகுதிக் கழக செயலாளர் திரு. M. சந்திரபோஸ் உள்ளிட்டோர் வழங்கினர். சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளர் திரு. S. முருகன், மாவட்ட இணைச் செயலாளர் திருமதி.K. செண்பகவல்லி, மாவட்ட பொருளாளர் திரு.K.G. முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டாக்டர் ஜிம் பாஷா ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. T.S. கண்ணன் தலைமையில், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. G.செந்தமிழன் மற்றும் கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி C.R.சரஸ்வதி ஆகியோர், தரமணியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். இதில் கழக அமைப்பு செயலாளர் திரு.எஸ்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட கழக ம் சார்பில், காமேஸ்வரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு. V.A.ராஜராஜ சோழன், அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. R.Tதங்கப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூர் மாவட்ட கழகம், கரூர் மத்திய நகர கழக செயலாளர் திரு. கே.எஸ்.மனோகரன் சார்பில், கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில், 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பை, கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு. பி.எஸ்.என். தங்கவேல் வழங்கினார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய கழகச் செயலாளர், திரு. கு.காளிதாஸ் ஏற்பாட்டில், மேடவாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. கு.செல்வகுமார் தலைமையில், செல்வகுமார் அவென்யூ, மதுரை வீரன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளியோருக்கு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம.கரிகாலன் வழங்கினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றிய மகளிரணி சார்பில், பாடியநல்லூர் பகுதிகளில், வீடு வீடாக சென்று, ஏழை எளிய மக்களுக்கு, கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டன. இதில், சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. மீ.மா.மாணிக்கவாசகம், மாவட்ட மாணவரணி செயலாளர் பி. சிவனேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இஸ்லாமியர்களுக்கு, மளிகைப் பொருட்களுடன், தலா 500 ரூபாயை, பெரியகுளம் ஒன்றிய கவுன்சிலர் சாஸ்தா மருதை அம்மாள் வழங்கினார். இதில் கழக நிர்வாகி திரு. விஜயராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென் சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை 140-வது தெற்கு வட்ட கழக செயலாளர் திரு. ராஜ கணேஷ், திரு. ராமு செந்தில் ஆகியோர் ஏற்பாட்டில், கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி C.R.சரஸ்வதி, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. செந்தமிழன், தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை திரு. T.S. கண்ணன், கழக அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு. S.முருகன், சைதாப்பேட்டை பகுதி கழக செயலாளர் கோட்டூர்புரம் திரு. கந்தன் ஆகியோர் இணைந்து, மேற்கு மாம்பலம் தனபால் தெருவில் வசிக்கும் மக்களுக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட, வத்தலக்குண்டு ஒன்றியம், சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 70 பேருக்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ராமு தேவர், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். திரு. ரஷீத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், பாளையங்கோட்டை அருகே, கே.டி.சி., நகரில் வசிக்கும் 100 பேருக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. S.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஏ.பி.பால் கண்ணன் ஆகியோர் வழங்கினர். இதில், நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. டோமினிக் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை மாநகர் மாவட்டம், கீழவாசல் பகுதி 26-வது வட்ட கழகம் சார்பில், திரு. சந்திஸ்வரன் ஏற்பாட்டில், அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை, கழக துணை பொதுச் செயலாளர் திரு. எம்.ரெங்கசாமி வழங்கினார். இதில், தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் திரு. ப.ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மானூத்து, அல்லிகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை, மாவட்ட கழக செயலாளர் திரு. இ.மகேந்திரன், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டியன் உள்ளிட்டோர் வழங்கினர்.

விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், சிவகாசி மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடி திருத்தும் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு, அரிசி, காய்கறிகள் அடங்கிய உணவு தொகுப்பை, மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.G. சாமிக்காளை வழங்கினார். இதே போல், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், வத்திராயிருப்பு ஒன்றிய சுழகம் சார்பில், நத்தம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, தலா 5 கிலோ அரிசியை, மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.காளிமுத்து வழங்கினார்.

கோவை கிழக்கு மாவட்டம், புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில், கரிச்சிபாளையம் அனுகிரக இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு, மதிய உணவு மற்றும் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட கழக செயலாளர் திரு. மா.ப.ரோகிணி கிருஷ்ணகுமார், அம்மா பேரவை பொறுப்பாளர் திரு.எல்.சக்திவேல் உள்ளிட்‍டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00