மதுரையில் குற்றவழக்கில் கைதானவருக்கு கொரோனா தொற்று - காவல் நிலையம் மற்றும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

May 23 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கும் சோதனை செய்யப்பட்டது.

மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர், மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த புகாரில், போலீசாரால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், முனீஸ்வரனுக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், முனீஸ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்ட திடீர் நகர் காவல் நிலையம், ஆஜர்படுத்தப்பட்ட நீதிபதியின் இல்லம், சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய திலகர்திடல் காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர், விசாரணைக்காக சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், காவல் நிலைய காவலர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மதுரையில் திருநங்கை ஒருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00