மதுரையில் மல்லிகை பூக்‍களின் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகளின் வாழ்க்‍கை மணம் இழந்துள்ளதாக வேதனை

May 23 2020 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடை உத்தரவால் மல்லிகைப்பூக்‍களின் விற்பனை முற்றிலுமாக சரிந்து, அதனை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்‍குறியாக உள்ளது.

வழக்‍கமாக கோடைக்‍காலங்களில் மணம் வீசும் மதுரை மல்லிகை பூ விற்பனை, இந்த ஆண்டு, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வந்த பூச்சந்தை, ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், விலை கடுமையாக சரிந்ததால், வீதிகளில் கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிலோ 3 ஆயிரம் வரை விற்கப்படும் மல்லிகைப் பூவின் விலை, தற்போது 80 ரூபாய் வரை சரிந்துள்ளது. மேலும், போக்‍குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மதுரையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருந்து பூக்‍களைப் பறிக்‍க யாரும் வராததால், செடிகளிலேயே பூக்‍கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மல்லிகை வியாபாரிகளும், விற்பனையாளர்களும் வலை சரிவால் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்‍கு உரிய நிவாரணம் அளிக்‍க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்திற்கு அடையாளமாக விளங்கும் மதுரை மல்லிகையின் விற்பனை சரிந்துள்ளதால், அதனை நம்பியுள்ள ஆயிரக்‍கணக்‍கானோரின் வாழ்க்‍கையும் மணம் இழந்து காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00