வருவாய் துறையினர் மீது தாக்குதல் நடத்திய நீரேற்றும் நிலைய உரிமையாளர் - தாக்குதல் நடத்திய போஸ் என்பவரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

May 23 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருவாய் துறையினர் மீது தாக்குதல் நடத்திய தனியார் நீரேற்றும் நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் கொரோனா ஊரடங்கின் போதும் ஆளுங்கட்சி ஆதரவாளாரான போஸ் என்பவர் அரசின் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தார். இதனால் துணை ஆட்சியர் வனமதி, வட்டாட்சியர் ஜெயசித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சென்று அனுமதியின்றி நீர் எடுக்கப்படும் இடத்தில் ஆழ்குழாய் கிணறுகளின் இணைப்புகளை துண்டித்து சீல் வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போஸ் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் காவல்துறையினரை கண்டித்து குன்றத்தூர் கோட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீரேற்றும் நிலைய உரிமையாளர் போஸ் மீது பிணையில் வெளிவர இயலாத சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00