அ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

May 25 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. E.ஜீவானந்தம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. குட்வில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதி கழகம் சார்பில், ஆலந்தூர் பகுதியில் உள்ள புதுப்பேட்டையில் வசிக்கும் பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. G. செந்தமிழன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ம.கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாவூத் நகர், தேவி கருமாரியம்மன் நகர், இந்திராணி தெரு மற்றும் அப்பாதுரை தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ம. கரிகாலன் உள்ளிட்டோர் இதனை வழங்கினர்.

மதுரை புறநகர் தெற்கு திருமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் 300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு. இ.மகேந்திரன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிடட்டோர் இதனை வழங்கினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக தகவல் தொழில் நுட்ப இணைச் செயலாளர் திரு. சிவா ஏற்பாட்டின் பேரில், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள 100 ஏழை எளியோருக்கு, அரிசி மற்றும் காய்கறிகளை, கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றிதாமஸ் வழங்கினார். மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூர் கழகம் சார்பில், ஏர்வாடியில் வசிக்கும் 125 குடும்பத்தினருக்கு, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. S.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் ஏபி. பால் கண்ணன் ஆகியோர் அரிசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு.தாழை மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகரில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நரியங்குளம் பகுதியில் உள்ள மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.காளிமுத்து தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை அருகே அமமுக சார்பில் 100 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நெல்லை மாவட்டம் களக்காடு பேரூர் கழகம் சார்பில் கலுங்குடியைச் சேர்ந்த 100 பேருக்கு அரிசியை நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. S.பரமசிவ ஐயப்பன், அமைப்புச் செயலாளர் திரு. ஏபி. பால் கண்ணன் ஆகியோர் வழங்கினர். கழக நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை வழங்கினர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கண்ணங்குடி ஒன்றிய ஒன்றியத்திற்குட்பட்ட உஞ்சனை புதுவயல், காலனி, பாத்திமா நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு.தேர்போகிV.பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் திரு. கார்த்திக் சரவண மெய்யப்பன் ஆகியோர் காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்.

தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் டாக்டர் ஜிம் பாஷா தலைமையில், வேளச்சேரி பகுதி 189-வது வட்டக் கழக துணைச் செயலாளர் திரு.R.M. செல்வம் ஏற்பாட்டில், தரமணியில் உள்ள பெரியார் நகர், கென்னடி தெருவில் வசிக்கும், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.டி.எஸ்.கண்ணன் சமூக இடைவெளியை பின்பற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், கழக நிர்வாகி டி.வினோலியா ஏற்பாட்டில், 100-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி வழங்கினார்.

கடலூர் வடக்கு மாவட்டம், பெருமாத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.எம்.ஆர்.திருமலைவாசன் ஏற்பாட்டில், கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் ராஜா பழனிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டாக்டர்.ஆர்.பக்த ரட்சகன் ஆகியோர் தலைமையில், கடலூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அக்ரி.திரு.முருகேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதிக்குட்பட்ட கீழ் மோட்டூர் கிராமத்தில் வசிக்கும் 250 குடும்பங்களுக்கு, கழக அமைப்பு செயலாளர் திரு.கோபால், ராணிப்பேட்டை மாவட்டக் கழக செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான என்.ஜி பார்த்திபன் ஆகியோர் தலைமையில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி ஒன்றிய அம்மா பேரவை சார்பில், தட்டான்குளம் கிராமத்தில் உள்ள 500 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு.A.P.பால் கண்ணன் ஆகியோர் வழங்கினர். நாங்குநேரி ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லத்துரை, நான்குநேரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.தங்க மாரியப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00