ஈரோடு மாவட்டத்தில் எள்ளுக்கு போதிய விலை இல்லை - விவசாயிகள் ஏமாற்றம் : அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

May 26 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் எள் நன்கு விளைந்தும், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று மாத பயிரான எள் இந்த ஆண்டு நன்கு விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது அங்கு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. கடந்த ஆண்டு 90 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அறுவடைக்கு போதிய ஆட்கள் கிடைக்காத நிலையில், அறுவடை செய்த எள்ளை வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசே நியாயமான விலைக்கு எள்ளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00