அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

May 26 2020 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஜவஹர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக அரசு கடந்த மே 7 அன்று, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதில் மே 1 ஆம் தேதி முதலே இந்த அரசாணை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பிப்ரவரி மாதம் முதலே ஏற்பட்ட நிலையில், அந்த இக்கட்டான காலத்தில் பணியாற்றிய அரசு பணியாளர்கள் பயன் பெறும் வகையில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமதி நிஷாபானு, இதுகுறித்து, அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்‍கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00