12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது - முகக்‍கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

May 27 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையைத் தவிர பிற பகுதிகளில் +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. ஆசிரியர்கள் முகக்‍கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

+2 வகுப்புக்‍கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணி, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்‍கப்பட்டு, இன்றுமுதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் +2விடைத்தாள் திருத்தும் பணிகளை கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்‍கம் மையத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார். மேலும், செங்குன்றம், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 2 ஆயிரத்து 40 ஆசிரியர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்‍க அனைத்து சுகாதார நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் 7 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. ஒரு அறைக்‍கு தலைமைத் தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி கூர்ந்தாய்வாளர் என 8 பேர் மட்டுமே அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளிவிட்டு, முகக்‍கவசம் அணிந்து விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் துப்பாக்‍கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. 266 முதன்மைத் தேர்வாளர்கள், 266 கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஆயிரத்து 544 உதவி தேர்வாளர்கள், 275 இதர பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த மையங்களில் கிருமி நாசினி தெளிக்‍கப்பட்டு சானிடைசர் வைக்‍கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் கைகளை சுத்தம் செய்த பின்னர், உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்‍கப்பட்டனர்.

நாமக்‍கல் மாவட்டத்தில் 3 இடங்களில் மையங்கள் அமைக்‍கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ராசிபுரம் மையத்தில் விடைத்தாள் திருத்தும்பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்டக்‍ கல்வி அலுவலர் திரு. மு.ஆ. உதயகுமார் விளக்‍கிக்‍ கூறினார்.

தூத்துக்‍குடி மாவட்டத்தில் 6 மையங்களில் +2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. ஆயிரத்து 344 ஆசிரியர்கள், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 518 விடைத்தாள்களை திருத்துகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

கோவையில் 5 மையங்களிலும், பொள்ளாச்சியில் 4 மையங்களிலும், எஸ்.எஸ். குளத்தில் 2 மையங்களிலும் +2 விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வந்து செல்ல 74 அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்‍கு நாள் அதிகரித்துவரும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளில் சென்னைக்‍கு மட்டும் விலக்‍கு அளிக்‍கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00