விருதுநகர் மாவட்டத்தில் தங்கையின் குடும்ப பிரச்னையை கேட்கச் சென்ற அண்ணன் அடித்துக் கொலை - தங்கையின் கணவன் உட்பட 3 பேர் கைது

May 27 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, தங்கையின் குடும்ப பிரச்னையை கேட்கச் சென்ற அண்ணனை, அடித்துக் கொலை செய்த 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.

காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்விக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செந்தில்குமார் தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கேள்விபட்ட கலைச்செல்வியின் அண்ணன் கணேசமூர்த்தி, செந்தில்குமாரிடம் இதுகுறித்து கேட்கச் சென்றபோது, இருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் ஆனந்த குமார், செல்வகுமார் ஆகிய 3 பேரும் கட்டையால் சரமாரியாக தாக்கியதில், கணேசமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில், கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பேரையும் பேரையும் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00