அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியர் மரணத்தில் நீடிக்கும் குழப்பம் - ஆட்சியாளர்களின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழக அரசு தடுமாறுவதாக, டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

May 29 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும், அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் சாட்சியாக அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். பெருந்தொற்று நோயை தடுப்பதற்கு உண்மையான அக்கறையோ, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களோ இல்லாத இவர்களின் செயல்பாடுகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும், அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது என்றும், திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறார்களோ என்ற கவலையையும் மக்களிடம் ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா, கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது - கவச உடை அணிந்த ஊழியர்கள்தான் அவரது உடலை வெளியில் கொண்டு வந்திருக்கின்றனர் - அதன்பிறகு என்ன நடந்ததோ, அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது - பிரிசில்லாவின் Case Sheet-ல் கோவிட்-19 வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை அவரது சகோதரர் ஊடகங்களிடம் தெரிவித்தார் - அதற்கு 'Case Sheet-ல் யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்' என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனைத் தரப்பு அளித்திருக்கிறது என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இது எவ்வளவு பெரிய துயரம்? - தலைமை செவிலியருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற நோயாளிகளின் கதி என்ன? - இந்த லட்சணத்தில்தான் சுகாதாரத்துறை நிர்வாகம் செயல்படுகிறதா? - கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது - இது உண்மை எனில், பணிக்காலம் முடிந்த பிறகும் கொரோனா எதிர்ப்புக்களத்தில் பணிபுரிந்த அந்த செவிலியருக்கு பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா? - தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்புப்பணியில் போராடிவரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப்பார்த்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பற்றி மக்களிடம் புதிய சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருக்கிறது - இன்னொருபக்கம், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக் கொண்டே செல்கிறது - இதில் எல்லாம் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி மாறி சினிமா வசனங்களைப்போல பேசுவது மட்டுமே போதும் என்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம் - ஆனால், பெருந்தொற்று நோயை தடுப்பதற்கு உண்மையான அக்கறையோ, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களோ இல்லாத இவர்களின் செயல்பாடுகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதையாவது உணர்வார்களா? என்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வினவியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00