நாமக்கல்லில் நாடாளுமன்ற உறுப்பினரை எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு மிரட்டல் - எம்.எல்.ஏ மீது காவல்துறையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் புகார்

May 29 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல்லில் அ.தி.மு.க., சட்டப்பேரவை உறுப்பினரின் முறைகேடுகளை தட்டிக்கேட்ட நாடாளுமன்ற உறுப்பினரை எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, மிரட்டியிருப்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மக்களவை உறுப்பினர் திரு.ஏ.கே.பி.சின்ராஜ், செய்தியாளர்களிடம் பேசியபோது, கரோனா நிவாரணத்திற்கு தான் வழங்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. பாஸ்கர் அவரது வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நாமக்கல் பயணியர் மாளிகையில் மக்களவை உறுப்பினர் சின்ராஜை எம்.எல்.ஏ.,பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் திரு. ஜஹாங்கிர் பாஷா மற்றும் காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினரை சட்டப்பேரவை உறுப்பினரே ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்ட விவகாரத்தால் நாமக்கல்லில் சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது எம்.எல்.ஏ மீது காவல்துறையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் புகார் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00