சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் உயிரிழந்த சம்பவம் : மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் அதிருப்தி

May 29 2020 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், தலைமை செவிலியருக்‍கு அளிக்‍கப்பட்ட சிசிச்சைகள் குறித்தும் ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தலைமை செவிலியர் பிரிசில்லாவுக்‍கு எடுத்த இரண்டு டெஸ்ட் ரிசல்ட்டுகளில், கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், CASE SHEET- ல் கொரோனா பாசிடிவ் என குறிப்பிடப்பட்டுள்ளது எப்படி? என கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இந்த முரண்பாடு ஏற்க முடியாததாக இருக்கிறது என்றும் இதே கூற்றை உறவினர்களும் முன் வைப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் என ரிசல்ட் வந்த பின்னர் உடல் நிலை மோசமடைந்துள்ளது - அதன் பின்னரும் அவரை ஏன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றவில்லை? என்ற கேள்வியையும் நர்சுகள் சங்கம் எழுப்பியுள்ளது.

பல முறை மருத்துவமனை முதல்வரிடம் பேசிய போதும், சரியான விளக்கம் அளிக்க மறுத்தது ஏன்? எனக்‍ கேட்டுள்ள தமிழ்நாடு நர்சுகள் சங்கம், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் கண்காணிப்பாளருக்கே சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமெனில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பணிசெய்யும் செவிலியா்களின் நிலை என்ன? என்றும் கவலை தெரிவித்துள்ளது.

சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை முதல்வா் மீது, துறை ரீதியான விசாரணை செய்து, தவறிழைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00