தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது - ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு

May 30 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 12 ஆயிரத்து 737 ஆண்களும், 7 ஆயிரத்து 504 பெண்களும், திருநங்கைகள் 5 பேரரும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதிற்குட்பட்ட ஆயிரத்து 203 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 313 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. சென்னை புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00