சென்னையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - பேருந்துகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் உத்தரவு

May 30 2020 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இயக்கப்படும் 3 ஆயிரத்து 584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக ஏற்கெனவே 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், எஞ்சிய பேருந்துகள் அனைத்தும் கொரோனா தடுப்பு பொது முடக்கத்தால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளில் ஆயிரத்து 775 பேருந்துகளுக்கான HFC, FC ஆகியவை வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருவதாகவும், எனவே அவற்றை புதுப்பித்து புதிய சான்றிதழ்கள் பெற வேண்டியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஊழியர்கள் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00